IPL2020: “கேப் முக்கியம் பிகிலு!!”.. பர்ப்பிள் கேப் வெல்லப்போவது யார்... முக்கிய 2 வீரர்களுக்கு இடையே தொடங்கிய கடும் போட்டி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச்சுற்று (குவாலிபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியது.

இதனால் ஐபிஎல் தொடர்களில் முதல் முறையாக டெல்லி அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி வீரர் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தமது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம், இந்த தொடரில் 29 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே சமயம், 27 விக்கெட்டுகள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, இந்த பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். அத்துடன் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் யார் அதிக விக்கெட்டுகளை எடுத்து, இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து பர்ப்பிள் கேப் மற்றும் ஆரஞ்சு கேப்களை அணியப் போகிறார்கள் என்கிற கடும் போட்டி ரபாடா - பும்ரா இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
