நேத்து 'மேட்ச்'ல... ஓவருக்கு ஓவர் 'பவுண்டரி' பறந்துச்சு,,.. அதுக்கு நடுவுல வீரர் செஞ்ச சிறப்பான 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடந்த போட்டியில் மும்பை அணியை பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களுக்கு 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் இளம் வீரர் இஷான் கிஷான், மிகவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவருக்கு பக்கபலமாக இறுதியில் பொல்லார்டும் இணைய, மும்பை இந்தியன்ஸ் 201 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி கண்டது.
மொத்தமாக, இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. பல சிக்ஸர்கள், பவுண்டரிகள் இந்த போட்டியில் பறந்த போதும், தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக பந்து வீசினார். 4 ஓவர்கள் பந்து வீசிய சுந்தர், ஒரு விக்கெட் எடுத்து 12 ரன்கள் மட்டுமே வழங்கினார்.
இது அனைத்தையும் விட சிறப்பம்சமாக, நேற்றைய போட்டியில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காத ஒரே பந்து வீச்சாளர் சுந்தர் தான். மிகவும் அதிரடியாக இரு அணிகளும் ரன் குவித்த போதிலும், துல்லியமாக பந்து வீசிய சுந்தரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இவர் பவர்பிளேயில் பந்து வீச ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
