மெர்சலான 'மைல்கல்'ல எட்ட 2 'கேப்டன்'களும் காத்திருக்காங்க,.. எதிர்பார்ப்பில் 'ஐபிஎல்' ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றிருந்தது. தொடர்ந்து தங்களது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது.
மற்றொரு அணியான விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, பந்து வீச்சில் மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்து இன்று களமிறங்கும் பட்சத்தில் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். இந்நிலையில், இன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் முக்கிய மைல்கல் ஒன்றை எட்ட காத்திருக்கின்றனர்.
பெங்களூர் கேப்டன் விராட் கோலி, இன்றைய போட்டியில் 85 ரன்கள் குவித்தால் டி20 போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 7 ஆவது வீரராகும் வாய்ப்பும் கோலிக்கு கிடைக்கும்.
அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் 10 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டியில் 5,000 போட்டிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற மைல்கல்லை எட்ட முடியும். ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அதிகபட்சமாக 5427 ரன்களுடன் முதலிடத்திலும், ரெய்னா 5368 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
ரோகித் சர்மா கடந்த போட்டியில், 6 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
