ஒரே 'நைட்டில்' ஸ்டாரான ராகுல் 'டெவாட்டியா',,.. அவர பத்தி இந்த விஷயங்கள தான்... அதிகமா 'கூகுள்'ள தேடியிருக்காங்க!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராகுல் டெவாட்டியா ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து இறுதிக் கட்டத்தில் அணியின் நெருக்கடியை குறைத்து ஐபிஎல் போட்டி வரலாற்றில் மிகப் பெரிய சேசிங் என்ற சாதனையை ராஜஸ்தான் அணி பெற உதவினார்.

தொடக்கத்தில் பல பந்துகளை ராகுல் வீணடித்த நிலையில், ராஜஸ்தான் அணி அவர் மூலம் தோல்வி பெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தனர். அதே போல, அவரை கிண்டல் செய்தும் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால், தன்னை கிண்டல் செய்த அனைவரின் வாயை அடைப்பது போல தன்னுடைய பேட்டிங் அமைந்தது.
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய போட்டியாக, நேற்றைய போட்டி அமைந்த நிலையில், ராகுல் டெவாட்டியா குறித்து பல விஷயங்களை இந்தியர்கள் கூகுளில் தேடியுள்ளனர். ஐபிஎல் போட்டியில் அவரது சம்பளம் என்ன?, அவரது சொந்த ஊர் எது?, அவர் குறித்த மீம்ஸ்கள், என பல காரியங்களை இந்தியர்கள் நேற்று தேடிப் பார்த்துள்ளனர்.
சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிகமாக கிண்டலை சம்பாதித்த ராகுல் டெவாட்டியா, நேற்று ஒரே இரவில் தன் மீதான விமர்சனங்களை சுக்கு நூறாக்கியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
