ராஜஸ்தானோட முதல் அடியே சிறப்பான அடி,,.. இருக்கு இன்னைக்கி 'ஃபன்' இருக்கு!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்து அசத்தியது.

தொடர்ந்து ஆடி வரும் ராஜஸ்தான் அணியும் மிகப் பெரிய இலக்கை எட்ட மிகவும் அதிரடியாக ஆடி வருகிறது. முன்னதாக, முதலில் ஆடிய பஞ்சாப் அணி பவர்பிளே ஓவர்களில் 60 ரன்களை குவித்திருந்தது. இந்த ஐபிஎல் சீசனில் பவர்பிளேயின் போது அடிக்கப்பட்ட அதிக ரன்களாக பதிவாகியிருந்த நிலையில், அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 6 ஓவர்களில் 69 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் சீசனில் பவர்பிளேயின் போது அதிக ரன்னாக பதிவு செய்தது.
இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் அணி, மிகச் சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த இலக்கை எட்டினால் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யப்பட்ட அதிக ஸ்கோராக இது பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
