"அட ஏன்யா இப்டி 'BP' ஏத்துறீங்க??.." உச்சகட்ட 'த்ரில்' லெவலுக்கு சென்ற 'மேட்ச்'... இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'த்ரில்' வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 எடுத்தது. பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தியிருந்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய நிலையில், ஸ்மித் விக்கெட் இழந்த போது, சற்று ரன் ரேட் குறைந்தது. இருந்த போதும் மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோர்ட்ரெல் வீசிய 18 ஆவது ஓவரில் ராகுல் தேவாட்டியா 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதனால், இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 21 ரன்களே தேவைபட்டது. 19 ஆவது ஓவரில் சிக்ஸர்கள் பறக்க கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது.
இதில் முதல் இரண்டு பந்தில் விக்கெட்டுடன் ரன்கள் எதுவும் செல்லாமல் இருந்த நிலையில், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் செய்யப்பட்ட அதிகபட்ச சேசிங் ஸ்கோராகவும் இது பதிவானது.

மற்ற செய்திகள்
