'9' வருஷ 'ரெகார்ட்'அ 'BREAK' பண்ணிட்டாங்க... ஆனாலும் இந்த ஒரு 'சாதனை' 'ஜஸ்ட்' மிஸ் ஆயிடுச்சு!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் பந்துகளை நாலாபக்கமும் சிதற விட்டனர்.

பஞ்சாப் அணி இதற்கு முந்தைய போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக ஆடியிருந்த நிலையில், ராகுல் 132 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த போட்டியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அகர்வால் சதமடித்தார். அகர்வால் 106 ரன்களும், ராகுல் 69 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதாவது, பஞ்சாப் அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கில்க்றிஸ்ட் மற்றும் பால் வால்தட்டி ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்ததே பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடி அதிகபட்சமாக இருந்தது. அந்த 9 வருட சாதனையை இன்று ராகுல் - அகர்வால் ஜோடி முறியடித்தது.
அதே போல ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளிலும் தொடக்க ஜோடி குவித்த மூன்றாவது அதிகபட்சமான ரன்னாக இது பதிவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் வார்னர் - பைர்ஸ்டோவ் இணை 186 ரன்கள் குவித்திருந்த நிலையில், 4 ரன்களில் ராகுல் - அகர்வால் ஜோடி அந்த சாதனையைத் தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
