‘ரசலின் சாதனையை ஒரே பந்தில் தகர்தெறிந்த மலிங்கா’..ப்ளே ஆஃப் வாய்ப்பை கைப்பற்ற போராடும் கொல்கத்தா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 05, 2019 10:55 PM

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

IPL 2019: Malinga delivery leaves Russell dismisses for first ball

ஐபிஎல் டி20 லீக்கின் கடைசி போட்டி இன்று(05.05.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் இந்தமுறை 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை குறைத்தார்.

முக்கியமான போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அனைத்து போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸல் இந்தமுறை மலிங்காவின் ஓவரில் முதல் பந்திலேயே அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 16.1 ஓவர்களின் முடிவில் 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டி காக் 30 ரன்களும், ரோஹித் ஷர்மா 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா இழந்துள்ளது.

Tags : #IPL #IPL2019 #ONEFAMILY #MIVKKR #RUSSELL #MALINGA