'விரைவில் விடிவு காலம் பிறக்கும்'...'கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம்'... உலகையே திரும்பி பார்க்க வைத்த தம்பதி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்த குழுவில் இடம்பெற்ற தம்பதிகள் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
![Behind Pfizer\'s Covid Vaccine, A Husband-Wife Dream Team Behind Pfizer\'s Covid Vaccine, A Husband-Wife Dream Team](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/behind-pfizers-covid-vaccine-a-husband-wife-dream-team.jpg)
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அது கொரோனா தடுப்பூசி தொடர்பான செய்தி. கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், அது 90 சதவிகிதம் செயல்திறன் உடையதாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் பெயர் செய்திகளில் பரபரப்பாக அடிபட்டாலும், அது அமெரிக்க நிறுவனம் மட்டுமே கண்டுபிடித்த தடுப்பூசி அல்ல. ஜெர்மன் நிறுவனமான பயோடெக் இரண்டும் இணைந்துதான் அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன
பயோஎன்டெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஒரு தம்பதி. மருத்துவரான உகுர் சாஹின் மற்றும் வ் என்ற அந்த தம்பதிக்கு, மருத்துவ ஆராய்ச்சியின் மேல் தீராத காதல். இதனால் தங்களின் பெரும்பாலான நேரத்தை ஆராய்ச்சியிலேயே செலவிட்டு வருகிறார்கள். கனவுக் குழு' என்று புகழப்படும் இந்த மருத்துவர் தம்பதியினர், 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய புற்றுநோய் நிபுணர் கிறிஸ்டோஃப் ஹூபருடன் இணைந்து பயோஎன்டெக் நிறுவனத்தை நிறுவினர்.
இவர்கள் இருவருக்கும் எந்த அளவிற்கு ஆராய்ச்சி மீது காதல் என்றால், தங்களின் திருமண நாளில் கூட இருவரும் ஆய்வுக் கூடத்திற்கு வந்து ஆராய்ச்சி செய்யத் தவறுவதில்லை. எளிய பின்னணியிலிருந்து வந்தவரான சாஹின், இன்னமும் தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் எளிமையாகத் தனது சைக்கிளிலேயே சில நேரங்களில் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். தனது நிறுவனத்தின் பங்குகள் என்ன விலைக்குப் போகிறது என்றுகூட என்று கூட யோசிக்காமல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் குறித்துப் படிப்பதில்தான் ஆர்வம் காட்டுவாராம் சாஹின்.
தம்பதியர் இருவரும் துருக்கியைப் பின்னணியாகக் கொண்டவர்கள், இன்னமும் தம்பதியர் புற்றுநோய், காசநோய் ஆய்வுகளில் கவனம் செலுத்திவரும் நிலையில், ஜெர்மனியின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவரான சாஹின் இன்னும் தனது எளிமையை மறக்காமல் இருப்பது பலருக்கு ஆச்சரியம் தரும் ஒன்றாகும். அந்த வகையில் தடுப்பூசி குறித்து அவர்கள் அளித்துள்ள நம்பிக்கை பலருக்கும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)