சிஎஸ்கே ஏலத்துல எடுக்கப்போற ‘முதல்’ வீரர் இவர்தான்.. உத்தப்பா கொடுத்த ‘சூப்பர்’ அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி முதலாவதாக எடுக்க உள்ள வீரர் குறித்து உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற இரண்டு புதிய நிறைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது.
அதன்படி நேற்று முன்தினம் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவையும், அடுத்ததாக கேப்டன் தோனியையும், அடுத்து மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது.
இந்த 4 வீரர்களை தவிர்த்து அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ ஆகியோர் ஏலத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்களில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர் அவர், ‘சென்னை அணி தற்போது தக்க வைத்துள்ள 4 பேரும் சிறப்பான வீரர்கள். என்னை பொருத்தவரை ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியின் முதல் சாய்ஸ் சுரேஷ் ரெய்னாவாக தான் இருப்பார். ஏனென்றால் கடந்த 10, 12 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் ஒரு முக்கிய வீரராக அவர் இருந்துள்ளார். பல அரையிறுதிப்போட்டிகளில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவே முயற்சி செய்யும்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் சில சிஎஸ்கே வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதில் டு பிளசிஸ் அடுத்த இடத்தில் இருக்கிறார். மொயின் அலியை தக்க வைத்ததற்கான காரணம் என்னவென்றால், அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி அவரை மீண்டும் தக்கவைத்துள்ளது. ஆனாலும் டு பிளசிஸ் சிஎஸ்கே அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது’ என உத்தப்பா கூறியுள்ளார்.