3 ஸ்டார்.. 5 ஸ்டார் இல்ல.. இது ஜீரோ ஸ்டார் ஹோட்டல்.. 4 பக்கமும் சுவரே இல்லங்க.. வைரல் பின்னணி.!

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Jul 20, 2022 04:50 PM

சொகுசு மற்றும் சௌகரியங்களுக்காக பலரும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு உண்டு. பொதுவாகவே 5 அல்லது 4 நட்சத்திர ஹோட்டல்களில் கட்டிடங்கள், அறைகள், உள்கட்டமைப்பு வசதிகள், வெளிச்சம், புல்வெளி என எல்லாமே ரம்மியமாக அமைக்கப்பட்டு இருக்கும்.

Swiss zero star hotel offers open space world crisis

Also Read | ஏலத்துல விடப்படும் 'ஹிட்லரின் கைக் கடிகாரம்.? அப்படி என்ன ஸ்பெஷல்.! தீயாய் பரவும் வரலாற்று பின்னணி..

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து நட்சத்திரக் ஹோட்டல் ஒன்று மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருப்பதற்காக வைரலாகி இருக்கிறது. ஆம், இந்த ஹோட்டலில் என்ன வித்தியாசம் என்றால் இந்த ஹோட்டலுக்கு வெளிப்புறச் சுவர்கள் எதுவுமே கிடையாது. அப்படியானால், நாற்புறமும் சுவர்களே இல்லாத ஒரு ஹோட்டலா என்றால், ஆமாம் அப்படியாக தான் இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது. சுவர்கள் சரி... மேற் கூரையாவது இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை.

சுவிட்சர்லாந்தின் Valais என்கிற மாகாணத்தில் இருக்கிறது Saillon கிராமம். இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்தான் இது. இந்த திட்டத்தை இந்த ஹோட்டலில் அமல்படுத்தியிருப்பவர்கள் இந்த ஹோட்டலின் உரிமையாளர்களான Riklin என்கிற சகோதரர்கள். இந்த ஹோட்டல் இப்படியாக உருவாக்கப்பட்டதற்கு பின்புறம் இருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

அதாவது எவ்வளவு வசதிகள் குறைந்தாலும், சின்ன சின்ன விஷயங்களுக்கும் மக்கள் அது குறையாக இருக்கிறது, இது குறையாக இருக்கிறது .. என்று மனம் சஞ்சலப்படுபவர்கள் உண்டு. உலகில் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் இருக்கின்றன. போர் வருகிறது அந்த நேரங்களில் குறைவான தேவைகளுடன் நிறைவுடன் வாழ மனிதர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டியது இருக்கிறது.

Swiss zero star hotel offers open space world crisis

இதேபோல் இதெல்லாமே மனிதர்கள் மனிதர்களுக்கும் பூமிக்கும் ஏற்படுத்தும் சேதம்தான். இவை குறித்தும் மக்கள் சிந்திக்க வேண்டும். அதெல்லாம் தான் இப்படியான ஹோட்டல் அமைக்க மூலகாரணம். எனவே அறைகள் இல்லாத இந்த ஹோட்டல் இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட ஒரு கட்டில், அருகில் இரண்டு நாற்காலிகள், மேஜை, அவற்றில் விளக்குகள், காலை உணவு, பானம் உள்ளிட்டவற்றுடன் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் 325 சுவிஸ் ஃப்ராங்குகள். இந்த ஆஃபர் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Also Read | கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்திய காதலன்.. கதையை முடிக்க Sketch போட்டுக் கொடுத்த காதலி.? களத்துல குதிச்ச நண்பர்கள்..

Tags : #SWITZERLAND #ZERO STAR HOTEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Swiss zero star hotel offers open space world crisis | World News.