'மேட்ச்'க்கு நடுவே நடந்த காதல் 'PROPOSAL'.. "இந்த 'ஜோடி'ய ஞாபகம் இருக்கா??.." மீண்டும் வைரலாகும் ஜோடிகளின் 'புகைப்படம்'.. அதுக்கும் 'ஐபிஎல்'க்கும் உள்ள 'கனெக்ஷன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Apr 13, 2021 07:15 PM

இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியிருந்தது.

india australia fan couple is now supporting for rcb in ipl 2021

கொரோனா தொற்றின் காரணமாக, அனைத்து விளையாட்டுகளும் தடைப்பட்டிருந்த நிலையில், கடந்த சீசனின் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்து நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்திருந்த நிலையில், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்திருந்தது.

இதில், இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர் செய்த செயல், உலகம் முழுவதும் அதிகம் வைரலாகி இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது ஆஸ்திரேலியக் காதலியை போட்டிக்கு மத்தியில் லவ் பிரபோஸ் செய்திருந்தார். தனது நண்பரின் செயலை சற்றும் எதிர்பாராத அந்த பெண், ஆச்சரியத்தில் உறைந்து நிற்க, அவரின் காதலையும் ஏற்றுக் கொண்டார்.

பரபரப்பான போட்டிக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த கேமராவில் பதிவாக, உடனடியாக இந்த வீடியோ அதிகம் வைரலானது. மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கூட இந்த ஜோடிக்கு கைத்தட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், இந்த காதல் ஜோடிகளின் புகைப்படம் ஒன்று, தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருவதையடுத்து, இவர்கள் இருவரும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஜெர்சியை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இதனால், இந்த அழகிய தம்பதிகள் பெங்களூர் அணிக்கு தான் இந்த முறை தங்களது ஆதரவை கொடுக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில், இவரின் புகைப்படங்கள் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India australia fan couple is now supporting for rcb in ipl 2021 | Sports News.