'நீங்க ஜெயிச்சது ரியல் டீம் கெடையாது...' 'பி டீமை தான் ஜெயிச்சிருக்கீங்க...' 'இந்தியாவை கிண்டல் செய்த கிரிக்கெட் வீரர்...' - இதையே ஒரு வேலையா வச்சுருக்காரே...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 16, 2021 05:32 PM

இந்திய அணியின் வெற்றியை, இங்கிலாந்து பி டீமை வென்றதற்கு வாழ்த்துகள் என மிகவும் நக்கலாக பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

Peterson sarcastically congratulations B team for winning

இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் தொடர்ச்சியாக கிண்டல் செய்து வருகிறார்.

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை பீட்டர்ஸன் மிகவும் கிண்டல் செய்து, நீங்கள் உண்மையான இங்கிலாந்து அணியை வெல்லவில்லை. பி டீமைத்தான் தோற்கடித்து உள்ளீர்கள் என்று கிண்டல் பதிவிட்டுள்ளார்.

பீட்டர்ஸன் ட்விட்டர் பதிவில்“இங்கிலாந்து பி டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலியை, சுழற்சி முறை ஓய்வுக்காக நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் பீட்டர்ஸன் கண்டித்துள்ளார்.

அந்த பதிவில், “மிகவும் சவாலான இடத்தில் டெஸ்ட் போட்டியில் வெல்ல சிறந்த அணியை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களால் உங்கள் உணர்ச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2005-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் நாங்கள்  வென்றோம். அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் தோற்றத்தை மாற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணியின் பெயர் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டுமானால், சிறந்த அணியைத் தேர்வு செய்தால்தான் முடியும். மொயின் அலி ஒரு டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்புகிறார்.” என பீட்டர்சன் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Peterson sarcastically congratulations B team for winning | Sports News.