VIDEO: பிராக்டீஸ் முடிச்சிட்டு நடந்து போய்ட்டு இருந்த தோனி.. திடீரென கிரவுண்டில் இருந்து கூப்பிட்ட ‘பாகிஸ்தான்’ பவுலர்.. சிரிச்சிக்கிட்டே ‘தோனி’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆலோசகர் தோனியுடன் பாகிஸ்தான் வீரர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி இன்று (24.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 5 முறை பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியுள்ளது. அதில் 5 முறையும் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தடவை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது. அதனால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று பயிற்சி முடிந்ததும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் தோனி சென்றுகொண்டு இருந்தார். அப்போது மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் இளம் பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி (Shahnawaz Dahani), தோனியைப் பார்த்து ஃபிட்டாக இருப்பதாக கூறினார்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தோனி, ‘எனக்கு வயது அதிகமாகிவிட்டது. நான் ஃபிட்டாக இல்லை’ எனக் கூறினார். உடனே, ‘இல்லை..இல்லை.. முன்பை விட இப்போதுதான் அதிகமாக ஃபிட்டாக உள்ளீர்கள்’ என ஷாநவாஸ் தஹானி கூறியதும், தோனி சிரித்துக்கொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Pakistan Bowler Shahnawaz Dahani getting excited seeing @msdhoni 😅❤pic.twitter.com/Q2rlCxXaWy
— Dhoni Army TN™ (@DhoniArmyTN) October 23, 2021
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இவர் தலைமையிலான இந்திய அணி பல்வேறு கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐசிசி நடத்தும் இந்த 3 தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் தோனி மட்டும்தான்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில், இந்திய அணிக்கு ஆலோசகராக தோனியை பிசிசிஐ நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.