நல்லா ‘விளையாடினா’ கையில ‘விரல்’ இருக்காதுனு மிரட்டினாங்க... ‘மோசமான’ அனுபவத்தை பகிர்ந்த ‘பிரபல’ இந்திய வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 16, 2020 06:29 PM

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனக்கு இளம்வயதில் நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Opposition Abducted And Threatened To Cut My Fingers Ashwin

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன் இளம்வயதில் டென்னிஸ் பந்து தொடரில் விளையாடியபோது எதிரணியைச் சேந்தவர்கள் தன்னைக் கடத்திச் சென்று மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “என் 15 வயதில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் ஃபைனலில் விளையாட இருந்தேன். அப்போது போட்டிக்கு கிளம்பிய என்னை வீட்டு வாசலில் வைத்து 2 பேர் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுடன் பைக்கில் ஏறச் சொன்னார்கள். நானும் போட்டிக்காக அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்து அவர்களுடன் சென்றேன்.

ஆனால் அவர்கள் என்னை ஒரு டீக்கடைக்கு அழைத்துச் சென்றார்கள். போட்டி துவங்கும் நேரமானதும் நான் அவர்களிடம் கிளம்பலாம் எனக் கூறியபோது தான் அவர்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின் அவர்கள் நான் போட்டியில் பங்கேற்று சிறப்பாக பவுலிங் செய்தால் என் கையில் விரல்கள் இருக்காது என மிரட்டினார்கள். மேலும் நான் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என சத்தியம் செய்த பின்னரே என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.