‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா..!’ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்.. வரலாறு படைத்த இந்தியாவின் ‘தங்க மகன்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு 6-வது பதக்கம் கிடைத்துள்ளது. இன்று (07.08.2021) காலை கோல்ஃப் விளையாட்டின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அதிதி 4-வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
ஆனால் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அதனை சரி செய்தார் . ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று விளையாடினார். தகுதி சுற்றின் முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இதன்மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நீரஜ் சாதனை படைத்தார்.
இதனை அடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் தனது முதல் சுற்றில் 87.30 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இதனை அடுத்து யாரும் இதனை தாண்டி வீசாததால், நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

மற்ற செய்திகள்
