‘ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம்’.. வெண்கலம் வென்றார் முகமது அலியின் தீவிர ரசிகை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று (04.08.2021) பெண்களுக்கான குத்துச்சண்டை எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினாவும், நடப்பு உலக சாம்பியனான துருக்கியின் புசனெஸ் சர்மெனெலியும் மோதினர். இதில் துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என கணக்கில் லவ்லினாவைத் தோற்கடித்தார்.
இதனால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை லவ்லினா தவறவிட்டார். ஆனாலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. இவர் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியா 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
