டி20 ‘வோர்ல்டு கப்’ டீம்ல ஒரு ‘சர்பிரைஸ்’ இருக்கலாம்... யார சொல்றாரு ‘கோலி?’... ரசிகர்களுக்கு காத்திருக்கும் ‘ஆச்சரியம்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jan 09, 2020 01:51 PM

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு பந்து வீச்சாளர் இடம்பெறுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Hints At Surprise Package Pacer For T20 World Cup

இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி புனேவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, “இந்த வெற்றி அணிக்கு உண்மையிலேயே ஒரு நல்ல அறிகுறியாகும். ரோகித் சர்மா இல்லாத நிலையிலும் கூட நெருக்கடியின்றி வெற்றி பெற்றிருக்கிறோம். வேகப்பந்து வீச்சாளா் நவ்தீப் சைனியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. பேட்டிங்கிற்கு உகந்த இந்த ஆடுகளத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசினார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய விராட் கோலி, “ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என நினைக்கிறேன். அவர் அதிவேகத்துடன் நன்கு பவுன்சர் வீசக்கூடியவராக இருப்பார். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா உள்ளூர் போட்டிகளில் பிரமாதமாக பந்து வீசி வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் இருப்பது, அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உலக கோப்பை போட்டியை எதிர்நோக்கும் போது, நம்மிடம் போதுமான பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி குறிப்பிட்டுள்ள பிரசித் கிருஷ்ணா 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.  கர்நாடகாவைச் சேர்ந்த பிரசித் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிள்ளார். இதுவரை அவர் 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயத்தால் விலகி இருப்பதால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரின் அவசியத்தை உணர்ந்து கோலி பிரசித்தின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : #CRICKET #VIRATKOHLI #ICCWORLDCUP #INDVSSL #PRASIDHKRISHNA