கொஞ்சமாவது 'ஃபீல்' பண்ணி 'லவ்' பண்ண விடுங்கையா...! 'புது மாப்பிள்ளைன்னு கூட பார்க்காம...' - பும்ராவை வச்சு செய்த மும்பை இந்தியன்ஸ் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபும்ரா தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போய், நியுசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் அவரை கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவிற்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த மார்ச் 15ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக பிசியாக விளையாடி வந்த புதுமாப்பிள்ளையான ஜஸ்பிரித் பும்ரா, தன் மனைவி சஞ்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பும்ரா, 'ஒவ்வொரு நாளும் என் இதயத்தை திருடிச்செல்லும் நபர் நீதான். எனக்கு சொந்தமானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' எனக் கூறினார்.
இந்நிலையில் பும்ராவின் பதிவை கண்ட மும்பை வீரர் ஜிம்மி நீஷம், 'நீங்கள் ட்ரெண்ட் போல்ட் குறித்துதான் பதிவிட்டீர்கள் என நினைத்தேன்' எனக் கிண்டல் அடித்துள்ளார்.
இதற்கு ஒரு காரணமும் உள்ளது. ஏனென்றால் ட்ரண்ட் போல்ட்-ம், பும்ராவும் மும்பை அணியின் தூண்களாக உள்ளனர். கடந்தாண்டு அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் இவர்களும் இருந்தனர். அதோடு இருவரும் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அதனால் தான் பும்ராவின் பதிவை ஜிம்மி நீஷம் கலாய்த்துள்ளார்.

மற்ற செய்திகள்
