'மீண்டு வா தல'.. சென்னை சூப்பர் கிங்ஸ்.. யார 'உசுப்பேத்தி' இருக்காங்க பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 27, 2019 12:47 AM

ஐபிஎல் அணிகளில் வலிமையான அணியாக திகழும் சென்னை அணி தன்னுடைய டீமில் இருக்கும் வீரர்களின் பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்தி, அந்த நாளை அவர்களுக்கு இன்னும் ஸ்பெஷல் ஆக்கிவிடும்.

CSK wishes Suresh Raina on his 33rd birthday, Twitter

அந்த வகையில் சென்னை அணியின் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இன்று தன்னுடைய 33-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி சென்னை அணி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

அதில், '' சுரேஷ் குமார் ரெய்னா, சோனு, மிஸ்டர் ஐபிஎல் என உங்களுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கலாம். ஆனால் தலைவரை போலவே இந்த நாட்டில் அவருக்கு இன்னொரு பெயரும் கிடைத்துள்ளது. இப்பொழுதும் எப்பொழுதும் 'சின்ன தல', எங்களது 3-வது நம்பர் தற்போது 33-வது நம்பரில் அடியெடுத்து வைக்கிறார். ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துக்கள்,'' என கூறியுள்ளது.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில் மீண்டு வா 'சின்ன தல' என்று அவரை உசுப்பேற்றி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் டீமில் மீண்டும் ரெய்னா இடம்பெற வேண்டும் என, சென்னை அணி மற்றும் ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்ன தல..