‘நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு’!.. ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்..! செம குஷியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Nov 27, 2019 10:37 AM
தனது பயிற்சியின் போது மிடில் ஸ்டெம்பை உடைத்த புகைப்படத்தை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது. அதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தனது பயிற்சியை பும்ரா தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பும்ரா பதிவிட்டுள்ளார்.
அதில், ‘என்னுடைய பயிற்சி நேரத்துக்கும், ஸ்டெம்புக்கு முடிவு வந்தது’ என உடைந்த மிடில் ஸ்டெம்ப் புகைப்படத்தை பும்ரா பதிவிட்டுள்ளார். இதனால் காயம் குணமடைந்து மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்கதேசத்துகு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் அசத்தி வருகின்றனர். இந்த தொடரில் மூவரும் சேர்ந்து 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
The End. #ForTheSessionAndTheStumps 🔥🔥 pic.twitter.com/79loGeUqgT
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 26, 2019
