"அஸ்வினால மட்டும் தான் முடியும்... வேற யாராலயும் அந்த ஒரு 'சாதனை'ய பண்ண முடியாது..." 'புகழாரம்' சூட்டிய கிரிக்கெட் 'ஜாம்பவான்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேன் மைதானத்தில் வைத்து நாளை நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் ஷேன் வார்னே இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் அனில் கும்ப்ளே உள்ளார்.
நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் கால் பதிக்கவுள்ள நிலையில், முத்தையா முரளிதரன் இந்திய வீரர் அஸ்வினை பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் உலகில் தற்போதுள்ள பந்து வீச்சாளர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டுமே பார்க்கிறேன். அஸ்வினைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவார்கள் என நான் நினைக்கவில்லை.
ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது அப்படி ஒரு நம்பிக்கையுமில்லை. இப்போது தான் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அப்படி ஒரு இலக்கை அவரால் எட்ட முடியும்' என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
