VIDEO : "என்ன 'அஸ்வின்', மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா??..." இந்த தடவ மாட்டப் பாத்தது யாரு??... வைரலாகும் லேட்டஸ்ட் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 13 ஆவது ஓவரை டெல்லி அணியின் அஸ்வின் வீசினார். அப்போது பேட்டிங் எதிர் திசையில் நின்ற க்ருணால் பாண்டியாவை அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த சீசனில் அஸ்வின் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தது கடும் சர்ச்சையானது. அதே போல, இந்தாண்டு தொடக்கத்தில் பெங்களூர் அணி வீரர் பிஞ்ச்சையும் அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும் அதனை அவர் செய்யவில்லை. இதற்கான விளக்கத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— pant shirt fc (@pant_fc) November 5, 2020

மற்ற செய்திகள்
