இளம் வீரரை எடுத்ததும் கைதட்டி கொண்டாடிய மும்பை அணி.. அதுவும் 15.25 கோடிக்கு எடுத்துருக்காங்க.. யாருப்பா அந்த பையன்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் இன்று பெங்களூரில் வைத்து, மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஏல பட்டியலில் உள்ள ஒவ்வொரு வீரரின் பெயரை அறிவித்ததும், அந்த குறிப்பிட்ட வீரரை அணியில் எடுக்க, பல அணிகள் கடுமையான போட்டி போட்டு வருகிறது.
இதில், பல வீரர்களை அணியில் எடுத்தே ஆக வேண்டுமென பல கோடி ரூபாய் வரைக்கும் தொகையை எகிற வைத்து, விறுவிறுப்பைக் கொண்டு சென்றனர்.
இதனால், பலரும் எதிர்பாராத வகையில் சில வீரர்களை வெவ்வேறு அணிகளும் தட்டித் தூக்கியது. இதில், ஐபிஎல் அணிகளில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, நீண்ட நேரமாகி எந்த வீரரும் எடுக்காமலேயே இருந்து வந்தது.
ஆனால், ஒரு இளம் வீரர் பெயர் அறிவிக்கப்பட்டதும் களத்தில் இறங்கி, கடுமையான போட்டியில் ஈடுபட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த ஆண்டு ஆடியதன் மூலம், இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் இளம் வீரர் இஷான் கிஷான். மிகவும் இளம் வயதிலேயே, பட்டாசு போல வெடிக்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் இஷான் கிஷான்.
இவரை மும்பை அணி விடுவித்தது முதலே, ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருத்துக்கள் நிலவி வந்தது. அதே போல, இன்றைய ஏலத்திலும் அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், மும்பை அணியுடன் மற்ற சில அணிகளும், கடுமையாக போட்டி போட்டது.
தொகை ஏறிக் கொண்டே இருந்தாலும், ஒரு பக்கம் மும்பை அணி, மனம் தளரவில்லை. தொடர்ந்து, போட்டி போட்டுக் கொண்டே இருக்க, இறுதியில், 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை அணியே வாங்கியது. அப்போது, மும்பை அணி உரிமையாளர்கள், இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு திரும்பியதை கைத்தடி ஆர்ப்பரித்து கொண்டாடினர்.
மும்பை அணி ஒரு வீரரை மட்டுமே இதுவரை எடுத்துள்ள நிலையில், அதையும் மிகவும் மதிப்புள்ள ஒரு வீரரை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
