ரெண்டாவது பாலும் சிக்ஸர்.. ஒரு முடிவோட இருக்கும் பஞ்சாப் அணி.. இந்த தடவ தட்டி தூக்குனது யார தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேக்கப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா, கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடியிருந்தார்.

மிகவும் வேகமாக, அதே வேளையில் ஸ்மார்ட் ஆகவும் பந்து வீசக் கூடியவர் ரபாடா. அப்படிப்பட்ட வீரரை, டெல்லி அணி தக்க வைத்துக் கொள்ளாத நிலையில், இன்று அவரது பெயர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, அவரது பெயரை அறிவித்தது முதலே, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டது. இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, ரபாடாவை 9.25 கோடிக்கு வாங்கி அசத்தியது.
முன்னதாக, டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த தவானை போட்டி போட்டு தூக்கிய பஞ்சாப் அணி, தற்போது மீண்டும் டெல்லி அணியுடன் போட்டி போட்டு, ரபாடாவை சொந்தமாக்கியது. முதல் லிஸ்ட்டிலயே முக்கிய இரண்டு வீரர்களை, பஞ்சாப் அணி சொந்தம் ஆக்கியுள்ளதால், பலரும் பஞ்சாப் அணி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
