'உண்மை என்னன்னு தெரியாம...' 'இப்படி நாக்குல பல்லு போட்டு பேசாதீங்க...' 'எவர்கிரீன் கப்பல் சிக்கியது குறித்து வைரலான தகவல்...' - பதிலடி கொடுத்த பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > உலகம்சூயஸ் கால்வயில் எவர் கிரீன் என்ற ஜப்பானிய கப்பல் சிக்கியத்தில் இருந்து, யாரும் அவ்வளவாக தெரியாத அந்த கால்வாய் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.
![Evergreen ship false news spread Marwa Elslad incident. Evergreen ship false news spread Marwa Elslad incident.](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/evergreen-ship-false-news-spread-marwa-elslad-incident.jpg)
எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன் மார்வா எல்ஸ்லேடார், தற்போது மத்திய தரைக்கடலின் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் Aida IV என்ற கப்பலில் கேப்டனுக்கு அடுத்தபடியான அதிகாரம்கொண்ட `ஃபர்ஸ்ட் மேட் இன் கமாண்ட்` பொறுப்பில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
தன்னைப் பற்றி தவறான செய்தி, அராப் நியூஸ் தளத்தில் வெளியாகியுள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகியுள்ளார் மார்வா.
இதுகுறித்து பிபிசி செய்தியில் பேசிய அவர், 'எனக்கு எப்போதும் கடல் மீது ஓர் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. நான் இப்படி கடற்துறையில் பணியாற்ற பல்வேறு சட்ட போராட்டத்தை மேற்கொண்டேன்.
இந்த துறையில் பயில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான அரபு அகாடமியில் சேர ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அப்போதைய எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அந்தச் சட்டப் போராட்டத்தில் தலையிட்ட பிறகுதான் மார்வாவுக்கு அனுமதி கிடைத்தது.
அதன்பின் ஆண்கள் மட்டுமே அங்கு இருந்ததால், தன்னைப் போன்ற மனப்பான்மை கொண்டவர்களிடம் பேசுவதற்குக்கூட அங்கு யாரும் இல்லை, என்னை மட்டம் தட்டவே பார்த்தனர்.
என்னை பற்றி யார் இந்த போலிச் செய்தியை பரப்புகிறார்கள், ஏன் உண்மை தெரியாமல் பொய்யான செய்தியை பேசி பரப்புகிறார்கள் என தெரியவில்லை. கப்பல்துறையில் சாதிக்க விரும்பும் அனைத்துப் பெண்களும், எதிர்மறையான கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் நேசிப்பதை அடையப் போராடுங்கள். இதுவே பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி' என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
மேலும் போலிச் செய்தியில் வெளியாகியுள்ள படம் அராப் நியூஸ் தளத்தில் மார்ச் 22-ம் தேதியன்று, எகிப்தின் முதல் பெண் கேப்டன் மார்வாவின் வெற்றிக் கதை குறித்து வெளியான செய்தியின் புகைப்படம்.
அதுமட்டுமல்லாமல் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் மார்வா 'ஃபர்ஸ்ட் மேட்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். Aida IV என்ற கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் மார்வாவின் தலைமையில் இருந்த அந்தக் கப்பல்தான் 2015-ம் ஆண்டு சூயஸ் கால்வாயை விரிவுப்படுத்திய பின் சென்ற முதல் கப்பல் என்ற பெருமைக்கும் உரியது.
பல்வேறு போராட்டங்களை சந்தித்து சாதித்த மார்வா, தற்போது பரவி வரும் போலி செய்தியால் தனக்கு பல்வேறு எதிர்மறையான கமென்ட்டுகள் வந்திருந்தாலும், பல நேர்மறையான மற்றும் தனக்கு ஆதரவான கருத்துகளும் வந்துள்ளன எனவும், முன்பைக் காட்டிலும் தற்போது தான் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாக மார்வா பிபிசி செய்தியில் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)