"அதுக்கு இது சரியா போச்சு.." கேட்ச் விட்ட சாண்டனர்.. ஜடேஜாவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பறக்க விட்ட ரசிகர்கள்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய (25.04.2022) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றது.
இதில், டாஸ் வென்ற கேப்டன் ஜடேஜா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இந்த இரு அணிகளும் மோதி இருந்த போட்டியில், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சென்னை அணியை அபாரமாக வீழ்த்தி இருந்தது.
சிஎஸ்கே வை பிரித்து மேய்ந்த தவான்
தொடர்ந்து, இன்றைய போட்டியில், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சென்னை அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கடைசி வரை களத்தில் இருந்த தவான், 88 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களை தாண்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், சென்னை அணிக்கு எதிராகவும் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை அடித்துள்ளார்.
முழு ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவான் பற்றி, ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பீல்டிங்கின் போது, சென்னை அணியின் செயல்பாடு கடுமையான விமர்சனத்தினை சந்தித்து வருகிறது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி ஆடி இருந்த முந்தைய போட்டியில், ஜடேஜா உள்ளிட்ட பல ஃபீல்டர்கள், நிறைய கேட்ச் வாய்ப்பினை தவற விட்டனர்.
சிஎஸ்கே அணியின் மோசமான ஃபீல்டிங்
ஒரு வேளை, அந்த கேட்ச்களை சென்னை அணி சரியாக பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் 30 ரன்கள் குறைவாக மும்பை அணியை கட்டுப்படுத்தி இருக்கலாம். அதே போல, பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், சென்னை அணி பீல்டிங்கில் சொதப்பி இருந்தது. ஒன்றிரண்டு கேட்ச்களை தவற விட்ட சிஎஸ்கே, சில ரன்களையும் வாரி வழங்கியது.
அந்த வகையில், இன்றைய போட்டியில் மிட்செல் சாண்டனர் தவற விட்ட கேட்ச் பற்றி, ரசிகர்கள் அதிகம் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம். பஞ்சாப் அணியில் தவான் மற்றும் பனுகா ராஜபக்சே ஆகியோர் 110 ரன்கள் சேர்த்து, பஞ்சாப் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
கேட்ச் விட்ட சாண்டனர்
இதில், ராஜபக்சே 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், அவர் ஐந்து ரன்களில் இருந்த போது, ஜடேஜா ஓவரில் கொடுத்த கேட்ச் ஒன்றை சாண்டனர் தவற விட்டார். இது சிக்ஸராகவும் மாறி இருந்தது. ஒரு வேளை, இது கேட்சாக மாறி இருந்தால், நிச்சயம் சில விக்கெட்டுகளை அடுத்து வீழ்த்தி, பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை கூட உருவாக்கி இருக்கலாம்.
ஆனால், சாண்டனர் ஜடேஜாவுக்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சாண்டனர் ஓவரில் கேட்ச் ஒன்றை ஜடேஜா தவற விட்டார். தற்போது, ஜடேஜா ஓவரில் சாண்டனர் கேட்சை மிஸ் செய்துள்ளதால், போன போட்டிக்கு இது சரியாக போனது என கிண்டலாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8