RCB-யின் தோல்விக்கு, இப்படி ஒரு CONNECTION-ஆ? விடாம துரத்தும் APRIL 23.? அப்படி என்ன இருக்கு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று (23.04.2022) நடைபெற்றிருந்த போட்டியில், பெங்களூர் அணி மிகவும் மோசமாக தோல்வி அடைந்திருந்தது, ரசிகர்களையும் அதிகம் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றிருந்த பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, இரண்டாவது ஓவரில் இருந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது.
ஹைதராபாத் பந்து வீச்சில் சிக்கிய 'RCB'
மார்கோ ஜென்சன் வீசிய அந்த ஓவரில், டு பிளெஸ்ஸிஸ், கோலி மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் அவுட்டானார்கள். 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி, பின்னர் அதிலிருந்து மீளவே இல்லை. மேக்ஸ்வெல் மற்றும் பிரபுதேசாய் ஆகியோர் முறையே 12 மற்றும் 15 ரன்கள் அடிக்க, மற்ற எந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னைத் தாண்டவில்லை.
16.1 ஓவர்களில், 68 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி ஆல் அவுட்டாகி இருந்தது. ஐபிஎல் தொடரில் அந்த அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 8 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருந்தது. மறுபக்கம், 8 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது பெங்களூர் அணி. அந்த அணியின் தோல்விக்கு, ஏப்ரல் 23 என்னும் தேதியுடன் Connect செய்து ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
April 23'ல என்ன இருக்கு?
இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்ப்போம். கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்திருந்தது. Universal Boss கிறிஸ் கெயில், 175 ரன்கள் அடித்து ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான்.
Golden Duck கோலி
இதன் பிறகு தான், ஏப்ரல் 23 ஆம் தேதி ஆர்சிபி அணியின் Unlucky நாளாக மாறி இருந்தது. கொல்கத்தா அணிக்கு எதிராக, கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி, 49 ரன்களில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்திருந்தது. இது தான் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்த போட்டியில், முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்திருப்பார்.
அதே போல, இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும், அதே ஏப்ரல் 23 ஆம் தேதி, தங்களின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி பதிவு செய்துள்ளது. இன்றும், கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதற்கு முன்பாக, லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
இதனால், இனி வரும் ஐபிஎல் தொடர்களில், ஏப்ரல் 23 ஆம் தேதி, பெங்களூர் அணிக்கு போட்டிகள் நடத்த வேண்டாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம், ஏப்ரல் 23 மற்றும் பெங்களூர் அணி குறித்து மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
