அட, அவங்க முகத்த பாருங்க.. ஒரு வழியா காவ்யா செம ஹேப்பி அண்ணாச்சி.. ரசிகர்களின் இதயத்தை அள்ளிய ரியாக்ஷன்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் சீசனின் 36 ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மேக்ஸ்வெல் மற்றும் பிரபுதேசாய் தவிர எந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை.
அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் இரண்டாவது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது.
அசத்திய 'யார்க்கர்' நடராஜன்
அதிகபட்சமாக ஹைதராபாத் அணி தரப்பில், மார்கோ ஜென்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இதில், நடப்பு தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளை இதுவரை எடுத்துள்ள நடராஜன், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறி உள்ளார்.
தொடர்நது, எளிய இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியில், இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 47 ரன்களை எடுத்திருந்தார். பின்னர், 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் மட்டும் இழந்த ஹைதராபாத் அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பட்டையை கிளப்பிய ஹைதராபாத்..
15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முறையே, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது ஹைதராபாத். இதனைத் தொடர்ந்து, சிஎஸ்கே, குஜராத், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது ஹைதராபாத் அணி.
கடந்த சீசனில், மூன்று போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது. தொடரின் நடுவே, கேப்டன்சி தொடர்பான பிரச்சனைகளும் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இந்த முறை அப்படியே நேர்மாறாக முழு ஃபார்முக்கு வந்துள்ள ஹைதராபாத், பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
காவ்யா மாறனின் உற்சாகம்
இந்நிலையில், ஹைதராபாத்தின் தொடர் வெற்றிற்கு பிறகு, அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த சீசனில், ஹைதராபாத் தோல்வி அடைந்த போதெல்லாம் கடும் வருத்தத்தில் இருந்திருப்பார் காவ்யா மாறன். அவரின் சோகமான புகைப்படங்கள், கடந்த ஐபிஎல் தொடரின் போது, அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
ஆனால், இந்த முறை தொடர்ந்து வெற்றிகளை குவித்து கொண்டிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் காவ்யா மாறன். அதிலும், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற போது, அவரது உற்சாகம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/