இவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'FAVOURITE' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீஸனின் பாதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் டெல்லி அணி முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். தேவ்தத் படிக்கல், இஷான் கிசான், ராகுல் டெவாட்டியா, சாம் குர்ரான் போன்ற வீரர்கள் இந்த சீசனில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் (Michael Slater), இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளைக் கொண்டு தன்னுடைய Fantasy ஐபிஎல் 11 அணியை தேர்வு செய்துள்ளார்.
தனது அணிக்கு டெல்லி அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மைக்கேல் தேர்வு செய்துள்ளார். இவரது 11 வீரர்களில் பெங்களூர், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்கள் அதிகம் இவரின் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், கோலி, ரோகித் சர்மா, தோனி போன்ற வீரர்களின் பெயர்கள் இல்லை.
மைக்கேல் ஸ்லேட்டர் தேர்வு செய்த அணி விவரம் : தேவ்தத் படிக்கல், மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான், ஏபி டி வில்லியர்ஸ், ரிஷப் பண்ட், க்ருணால் பாண்டியா, யுஸ்வேந்த்ர சஹால், ராஷித் கான், காகிஸோ ரபாடா, ட்ரெண்ட் போல்ட்

மற்ற செய்திகள்
