எனக்கு சந்தேகமே ..இல்ல.! 'நீங்க வேணும்னா பாருங்க...' டி-20 'வேர்ல்டு கப்' ஜெயிக்க போறது 'அந்த டீம்' தான்...! - மைக்கேல் வாகன் கணிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலக கோப்பையை எந்த அணி வெல்லப்போகிறது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி தான் வெல்லும் என கருதுகின்றனர். இந்த நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி-20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு பிரகாசமாக உள்ளது என்பது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், டிவிட்டரில் படு ஆக்டிவாக அனைத்துக்கும் கருத்து சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி டி-20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு மற்ற அணிகளை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி தற்போது எவ்விதத்திலும் குறைகள் இல்லாத முழுமையான அணியாக உள்ளது என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
2015 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பின்னர், வலுவான அணியாக கட்டமைத்தார் கேப்டன் ஒயின் மோர்கன். அதன் விளைவாக, 2019 உலக கோப்பையை ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது. டி-20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக இங்கிலாந்து அணி ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பையில் முழுமையான அணியாக களமிறங்குவதால், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
