'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு ONE DAY மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு GUESS பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சில வாரங்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற்று அதில் இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி எந்த விக்கெட்டும் போகாமல் ஏழு ஓவருக்கு 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்த கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தியா 3-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வாகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Early One day series prediction .... India will win 3-0 !!! No Root or Archer ... #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 22, 2021

மற்ற செய்திகள்
