"சிறப்பா ஆடி 'பட்டை'ய கெளப்பணும்..." 'இந்திய' இளம் வீரருக்கு 'சர்ப்ரைஸ்' வாழ்த்து சொன்ன முன்னாள் வீரர்.. "இது நம்ம லிஸ்ட்'ல இல்லையே"!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், நாளை ஆரம்பமாகிறது.

இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி 20 தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். அதே போல, இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவும் (Prasidh Krishna) முதல் முறையாக, சர்வதேச அணிக்கு ஆட தேர்வாகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் பிரஷித் கிருஷ்ணா, முதல் தர போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தனது பந்து வீச்சில், அதிக வேறுபாடுகளை திறம்பட காட்டும் பிரஷித் கிருஷ்ணா, சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 6 போட்டிகளில் ஆடி, 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், பிரஷித் கிருஷ்ணா இந்திய அணியில் ஆட தேர்வானதற்கு, எதிர்பாராத இடத்தில் இருந்து பாராட்டு ஒன்று வந்து சேர்ந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் (Glenn Mcgrath), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரஷித் கிருஷ்ணா புகைப்படத்தை பகிர்ந்து, 'இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்' என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆனது கொரோனா தொற்று பரவுவதற்கு முன், டி 20 உலக கோப்பை போட்டியின் இருந்திய அணிக்கு பிரஷித் கிருஷ்ணா தேர்வாக வாய்ப்புள்ளது பற்றி, இந்திய கேப்டன் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
