கொஞ்சம் கூட 'இரக்கம்' இல்லையா...? என்னப்பா பவுலிங் இது...? 'கத்துக்கிட்ட மொத்த வித்தைய இறக்கிட்டாரு...' - நிலைகுலைந்து போன ராஜஸ்தான் பேட்ஸ்மேன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் நேற்றைய (05-10-2021) ஆட்டத்தில் மோதிய மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டும் தங்கள் பந்துவீச்சு திறனை முழுஅளவில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைய கிரிக்கெட் அணிகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் நேற்று துபாய் ஷார்ஜா மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் தங்களின் அபார பந்துவீச்சு திறனை நேற்றைய போட்டியில் முழுவதுமாக காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அட்டகாசமான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் 24 மற்றும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அவர்கள் மட்டுமல்லாது, அதைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 15 ரன்களிலும் மற்றும் ராகுல் திவாடியா 12 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த அனைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் ஒற்றை இலக்கங்களுடன் பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 90 ரன்களை மட்டுமே எடுத்தது. இதற்கு காரணம் மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சுதான் என கிரிக்கெட் நெட்டிசன்கள் மும்பை அணியை புகழ்ந்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கவுட்டர் நைல் 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்கள் ஏறவிடாமல் பார்த்துக்கொண்டார். அதோடு, ராஜஸ்தான் அணியின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதே போல் ஜிம்மி நீஷம் பந்து வீசிய ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்கபலமாக இருந்தது.