"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்?!!... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல!!!"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்புக்கு குறைவின்றி நடந்து முடிந்துள்ள நிலையில், தொடரின் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி மும்பை அணி குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்து அந்த அணியைப் பாராட்டியுள்ளார்.
மும்பை அணி குறித்து பேசியுள்ள டாம் மூடி, "இது நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி ரஷீத் கானை டிரேட் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அணுகியது. அப்போது இதுபோல ரஷீத் கானை டிரேட் செய்துகொள்ள விருப்பம் எனக் கேட்டு கதவைத் தட்ட வேறு எந்த அணிக்கும் துணிச்சல் இல்லை. அவர்கள் அப்படி கேட்டபோது நீங்கள் அதற்கு விரும்புவது சரி, உங்களை போலவே தான் உலகம் முழுவதுமே செய்ய நினைக்கிறது என்றே இருந்தது.
அதாவது ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக நான் என் அனுபவத்தில் கண்டறிந்தது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுபோன்ற வர்த்தக வாய்ப்புகளை தேடுவதில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. உங்கள் கதவுகளைத் தட்டி கேலிக்குரிய ஒன்றைக் கேட்க அவர்கள் பயப்படுவதே இல்லை. அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் ஏழு உரிமையாளர்களிடம் இதேபோல அவர்கள் செய்தால் இறுதியில் அவர்கள் விரும்புவதை பெறப் போகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
