'ஒரேயொரு LIKEஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 18, 2020 09:35 PM

விராட் கோலியை கிண்டலடித்து போடப்பட்ட மீம்ஸை லைக் செய்த சூர்யகுமார் யாதவ் தற்போது மீண்டும் செய்த ஒரு காரியத்தால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

Suryakumar Yadav Tries to Pump Up Kohli After Liking Meme Gets Trolled

சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்போதும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த ஐபிஎல் சீசனிலும் அவர் சிறப்பாக விளையாடிய போதும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இது பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பிய நிலையில் அதன் பின்னர் நடந்த மும்பை - பெங்களூரு இடையேயான போட்டியில் கோலி சூர்யகுமாரை முறைத்து சீண்டினார்.

Suryakumar Yadav Tries to Pump Up Kohli After Liking Meme Gets Trolled

ஆனால் அப்போதும் கடைசி வரை களத்தில் இருந்த சூர்யகுமார் மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்நிலையிலேயே முன்னதாக விராட் கோலியை பேப்பர் கேப்டன் என கிண்டலடித்து ரோஹித் ஷர்மாவை உயர்த்திப் பேசுமாறு பகிரப்பட்ட மீம்ஸை லைக் செய்து சூர்யகுமார் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் அவர் அதை அன்லைக் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவமே கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே பனிப்போர் என வெளியான தகவல்கள் உண்மைதானோ என்ற பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த சூழலில், சூர்யகுமார் செய்த மற்றொரு காரியத்தால் மீண்டும் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.  

Suryakumar Yadav Tries to Pump Up Kohli After Liking Meme Gets Trolled

இதைத்தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலி சிட்னியில் தீவிர பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு டெஸ்ட் பேட்டிங் பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். அதையடுத்து அந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்துள்ள சூர்யகுமார், "எனர்ஜி, சவுண்ட், கோலியின் ஆதிக்கத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை" எனக் கூறி ரசிகர்கள் கலாய்க்கும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

Suryakumar Yadav Tries to Pump Up Kohli After Liking Meme Gets Trolled

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suryakumar Yadav Tries to Pump Up Kohli After Liking Meme Gets Trolled | Sports News.