‘இங்க வாய்ப்பு கிடைக்கல.. அமெரிக்கா போய் விளையாட போறேன்’.. கோலி, ரிஷப் பந்துடன் விளையாடிய வீரர் எடுத்த திடீர் முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி, ரிஷப் பந்துடன் டெல்லி அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் சிறப்பாக விளையாடிய சிலருக்கு தேசிய அணி வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. அதனால் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். அதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் உன்முக்த் சந்த் சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான மனன் ஷர்மாவும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் மனன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மனன் ஷர்மா, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஷர்மாவின் மகன். இவர் கவுதம் கம்பீர், விராட் கோலி, ரிஷப் பந்த ஆகியோருடன் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார். இதில் ரிஷப் பந்த், மனன் ஷர்மாவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணிக்காக கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகமான மனன் ஷர்மா, இதுவரை 35 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 1 சதம், 8 அரைசதங்கள் மற்றும் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்று கிரிக்கெட் விளையாட உள்ளதாக மனன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
