"என்னது, இன்னைக்கி மேட்ச்'ல அவரு இல்லையா??..." அதிர்ச்சியில் 'ரசிகர்'கள்... 'டாஸ்' வென்றது யார்?,,.. அணி வீரர்கள் மற்றும் முழு விவரம் உள்ளே:

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Sep 20, 2020 07:26 PM

13 ஆவது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

Kxip vs DC : KXIP won the toss and chose to bowling

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணியும், கே.எல் ராகுல் (KL Rahul)  தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings  XI Punjab) அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டிலேயே இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மறுபக்கம், பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் முதல் முறையாக இந்த தொடரில் செயல்படவுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை பல திறமையான இளம் வீரர்களை கொண்டுள்ள அதே வேளையில் சில அனுபவம் மிக்க வீரர்களையும் கொண்டுள்ளது.

மறுபுறம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், அதிரடி  வீரர் கிறிஸ் கெயில் இன்று களமிறங்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், ராகுல் ,மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டெல்லி அணிக்கு வெற்றி பெறுவது கடினமாக அமையலாம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடும் லெவன் :

கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், சர்பராஸ் கான், கிளென் மேக்ஸ்வெல், க்றிஸ் ஜோர்டன், கிருஷ்ணப்பா கவுதம், ஷெல்டன் கோட்ரெல், முகமது சமி, ரவி பிஷ்நோய்

டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆடும் லெவன்:

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சிம்ரோன் ஹெட்மெயர், மார்கஸ் ஸ்டியோனிஸ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், மோஹித் சர்மா, அன்ரிச் நோர்டி, காகிஸோ ரபாடா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kxip vs DC : KXIP won the toss and chose to bowling | Sports News.