"'பஞ்சாப்' வேற மாதிரி 'பட்டை'ய கெளப்பிட்டு இருக்காங்க... அவங்களோட 'WINNING' சீக்ரெட் இது தான்..." காரணம் சொன்ன 'கம்பீர்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் வெளியேறியுள்ள நிலையில், மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக போராடி வருகிறது.
இதில் முதல் 7 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்ட பஞ்சாப் அணி, அதற்கு அடுத்தபடியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி கண்டு அசத்தியது. இதில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த பஞ்சாப் அணி, இறுதியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தின் முடிவையே மாற்றியமைத்தனர்.
இரண்டாவது பாதியில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக பஞ்சாப் உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றுமா என பஞ்சாப் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் அணி குறித்து கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
'முதல் 7 போட்டிகளில் பஞ்சாப் அணியில் கடைசி ஓவர்களை பந்து வீச சிறந்த பவுலர்கள் இல்லாமல் கேப்டன் ராகுல் அவதிப்பட்டு வந்தார். ஆனால், தற்போது அவர் 3 ஷமி, ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் என 3 வேகப்பந்து வீச்சாளர்களை ராகுல் செட் செய்து வைத்துள்ளார். இது தான் பஞ்சாப் அணிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.
இதில் அதிக பங்கு அர்ஷ்தீப் சிங்கை தான் சாரும். ஷமி, ஜோர்டன் என இருவரும் சர்வதேச வீரர்கள். ஆனால், அர்ஷ்தீப் சிங் அப்படியில்லை. இளம் வீரரான அவர், கடைசி கட்டங்களில் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அர்ஷ்தீப் அணியில் இடம்பெற்றுள்ளதால் பஞ்சாப் அணியின் மொத்த வடிவமும் மாறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என காம்பீர் தெரிவித்தார்.