'இந்த TRICK-அ மிஸ் பண்ணிட்டீங்களே கேப்டன்'!.. பதில் சொல்லுங்க!.. ஒரு வேளை இந்தியா ஜெயிச்சிருக்குமோ?.. கோட்டை விட்டாரா கோலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், விராட் கோலி கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி ஒரு விஷயத்தை செய்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருந்திருக்கும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. கடின இலக்கு என அனைவரும் நினைத்த நிலையில் இங்கிலாந்து அணி அசால்டாக 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இதில் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ (124) - பென் ஸ்டோக்ஸ் (99) ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண், இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ சிறப்பாக ஆடிய போது பிரசித் கிருஷ்ணா இறுதி நேரத்தில் 2 விக்கெட்களை எடுத்துக்கொடுத்து இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அதனை பயன்படுத்திக்கொண்டு ஹர்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நேரத்திலும் ஏற்கனவே ரன்களை அதிகளவில் கொடுத்திருந்த க்ருணால் மற்றும் குல்தீப் யாதவுக்கு கோலி ஓவர் வழங்கி ஏமாற்றமளித்தார் என தெரிவித்தார்.
மேலும் அவர், அணியில் புவனேஷ்வர் குமார், ஷார்துல் தாகூர், பிரசித் உள்ளிட்ட அனைவரும் கடும் பிரஷருக்கு இடையே பந்துவீசினர். எனவே, அதுபோன்ற நேரத்தில் 6வது பவுலரை கண்டிப்பாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஹர்த்திக் பாண்டியாவை 6வது பவுலராக ஒரு 4-5 ஓவருக்கு பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் 2 விக்கெட்டையாவது எடுத்திருப்பார். பவுலர்களை பயன்படுத்துவதில் கோலி மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என லக்ஷ்மண் தெரிவித்தார்.