'சத்தியமா சொல்றேன்... ஒவ்வொரு ப்ளேயரும் ஒரு அதிசயம்'!.. 'இப்போதைய இந்திய அணி ஏன் பிரமாதமானது'?... அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்த முன்னாள் வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் தொடரில், இந்திய அணியில் இடம்பெறும் இளம் வீரர்கள் அதிர்ஷ்டசாலிகள், பிரமாதமான வீரர்களுடன் கூடிய ஓய்வறை, இளம் வீரர்கள் வளர்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு என்று முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்காக 57 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ரமீஸ் ராஜா இந்திய இளம் வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் ஓய்வறை ஒரு அபாரமான இடம், இதில் இருப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளார்.
அவர் ரமீஸ் ஸ்பீக் என்ற தனது யூடியூப் சேனலில் இந்திய கிரிக்கெட் அமைப்பின் பலம், இளம் வீரர்கள், பெஞ்ச் ஸ்ட்ரெந்த், ஒரு வீரர் இல்லாவிட்டால் இன்னொரு வீரர் என்ற தெரிவு ஆகியவை பற்றி வெகுவாகப் பாராட்டிப்பேசினார்.
ரமீஸ் ராஜா கூறியதாவது, "உங்கள் சிஸ்டம் வலுவாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கக் காத்திருக்கும் வீரர்களும் அபாரம். இந்திய இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் குழுவுடன் இருக்க இது மிகவும் பிரமாதமான நேரம். அந்த ஓய்வறை ஆக்ரோஷத்தையும் அளிக்கிறது, வழிகாட்டுதலையும் செய்கிறது.
நிர்வாகம் வீரர்களை நன்றாக ஆதரிக்கிறது. வீரர்களின் திறமை இங்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. இளம் வீரர்கள் இறங்கி பயமின்றி விளையாட முடிகிறது. அதற்கு காரணம் அவர்களுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.
அந்த மாதிரி சமயத்தில் தான் கற்றுக் கொள்ளுதல் அருமையாக நடைபெறும். இதுவே இந்திய அணியுடன் இருக்க சரியான நேரமும், இடமும் ஆகும். இதுதான் மிகப்பிரமாதமான காலம், நேரம், இளம் வீரர்கள் கரியரில் ஒரு அருமையான காலகட்டம். இது அவர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் மென்மேலும் உயர வழிவகை செய்யும் அமைப்பாகும்" என்று வெகுவாக புகழ்ந்துள்ளார்.
குருணால் பாண்டியாவின் அபாரமான உலக சாதனை அறிமுக ஒருநாள் போட்டி, பிரசித் கிருஷ்ணாவுக்கு புகட்டப்பட்ட பாடம், பிறகு அவர் மீண்டெழுந்து 4 விக்கெட்டுகளை debutவில் கைப்பற்றி உலக சாதனை புரிந்தது, 135/0-லிருந்து இங்கிலந்தை 251 ரன்களுக்குச் சுருட்டியது என்று அனைத்தும் ரமீஸ் ராஜாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், டி20 தொடர்களை வென்ற விதம் ஆகியவை உலக கிரிக்கெட் வல்லுநர்களை இந்திய அணி மீது புகழ் மழை பொழியக் காரணமாகியுள்ளது.

மற்ற செய்திகள்
