'அட ஏங்க டென்சன் ஆகுறீங்க... ஒவ்வொரு இடத்துக்கும் 3 பேரு வச்சிருக்கோம்'!.. கேப்டன் கோலி கொடுத்த CLUE!.. வாயடைத்துப் போன விமர்சகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பேட்டிங் குறித்து கேப்டன் கோலி அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில், "கடந்த சில காலங்களில் இது ஒரு ஸ்வீட்டான வெற்றி. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை நாங்கள் விரைவில் வீழ்த்தியது சிறப்பான ஒன்று.
இந்த போட்டியில் நாங்கள் மீண்டு வந்த விதம் மிகவும் சிறப்பான ஒன்று. தற்போது மிகவும் பெருமையான இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு அணியாக எங்களது வீரர்கள் அவர்களது மன உறுதி மற்றும் திறனை இந்த போட்டியில் நிரூபித்துள்ளனர்.
குறிப்பாக ஷிகர் தவானின் இன்னிங்சை பாராட்டியாக வேண்டும். அதேபோன்று பின்வரிசையில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். இவர்கள் இருவரும் விளையாடிய விதம் ரன்களை அணிக்கு கொண்டுவந்தது.மற்றபடி அனைத்து வீரர்களும் சுயநலமின்றி தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.
இந்திய அணியில் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது நிறைய வீரர்கள் அணிக்கு விளையாட காத்திருக்கின்றனர். அவர்களை தேர்வு செய்வதும் மகிழ்ச்சிதான்.
மேலும், இந்திய அணியில் தற்போது ஒவ்வொரு இடத்திற்கும் விளையாட இரண்டு, மூன்று வீரர்கள் தயாராக உள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயம் தான். இந்திய அணியில் விளையாடாமல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களின் பலமும் அதிகம் தான் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
