'கேட்கல... சத்தமா... இன்னும் சத்தமா'!.. 'இந்த ஆட்டம் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா'!?.. ரவுண்டு கட்டி விளாசிய கேஎல் ராகுல்!.. பின்னணி 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டிகளில் மோசமாக விளையாடிய கேஎல் ராகுல், ஒரு நாள் தொடரில் மீண்டும் ஃபார்முக்கு வந்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த போட்டியில் 98 ரன்களை அடித்த ஷிகர் தவான் 4 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்த வீரர்கள் அனைவரும் தங்களது பொறுப்பையுணர்ந்து செயல்பட்டனர்.
குறிப்பாக, கேஎல் ராகுல் இந்த போட்டியில் சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 2016ல் ஜிம்பாப்வேக்கு எதிரான தனது ஒருநாள் போட்டிகளின் அறிமுக போட்டியில் களமிறங்கி விளையாடிய அவர், தற்போது இந்த போட்டியில் தான் அடித்துள்ள சதத்தையடுத்து ஒருநாள் தொடர்களில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருடன் அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து ராகுல் சிறப்பாக விளையாடினார். ரன் மழையை பொழிந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்களும் அடக்கம்.
கடந்த 2020 ஆஸ்திரேலிய தொடரிலிருந்து மிடில் ஆர்டரில் ராகுல் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைசதத்தையும் 2 சதங்களையும் அடித்துள்ளார்.
இந்த போட்டியில் 37 ரன்கள் இருக்கும்போது களமிறங்கிய கேஎல் ராகுல், தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் 114 பந்துகளில் 108 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.
கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் மோசமான விமர்சனங்களை பெற்ற ராகுல் தற்போது இந்த தொடரின் இரு போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்தின்மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
