'என்னங்க சார் உங்க சட்டம்'!?.. அம்பயர் செய்த தவறால்... ரன்களை இழந்த ரிஷப் பண்ட்!.. 'ஏ.. கரும்பேத்து மாரியாத்தா... உனக்கு கண்ணு இல்லையாடி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பண்ட் பவுண்டரி அடித்தும் அதற்கு ரன்கள் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் அதிரடி பேட்டிங் காட்டினார்.
இந்நிலையில், நடுவர்களின் தவறால் இந்திய அணிக்கு ரன்கள் போனது முன்னாள் வீரர்கள் பலரை கோபப்படுத்தியுள்ளது.
இந்திய அணி நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடின இலக்கை நிர்ணயித்தபோதும் இங்கிலாந்து சிறப்பான பேட்டிங்கால் போட்டியை வென்றது. இந்திய அணியில் விராட் கோலி,கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடிய போதும், ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் தான் இந்திய அணி 336 ரன்களுக்கு வேகமாக அழைத்துச் சென்றது.
போட்டியின் போது ரிஷப் பண்ட்-க்கு 2 முறை அவுட் கொடுக்கப்பட்டு பின்னர் DRS முறையால் மீண்டு வந்தார். அதில் ஒரு DRS தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 40வது ஓவரில் டாம் கரண் வீசிய பந்து ரிஷப் பண்ட் பேட்டில் பட்டு கீப்பர் திசையில் பவுண்டரிக்கு சென்றது. ஆனால், பந்து அவரின் காலில் பட்டது எனக்கூறி முதலில் அவருக்கு LBW அவுட் கொடுக்கப்பட்டது.
எனினும், பண்ட் உடனடியா DRS கேட்டதால், ரிவ்வியூவில் அப்பந்து முதலில் பேட்டில் பட்டது தெரியவந்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது. எனினும், அந்த பவுண்டரிக்கு ரன்கள் கொடுக்கப்படவில்லை.
ஐசிசியின் DRS விதிமுறைப்படி, பேட்ஸ்மேனுக்கு முதலில் கள நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டு பின்னர் டி.ஆர்.எஸ் முறையால் நாட் அவுட் கொடுக்கப்பட்டால், அந்த பந்தில் நடந்த எந்த ஒரு விஷயமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்தவகையில் பேட்ஸ்மேன் அடித்த ரன்களும் அவருக்கு கொடுக்கப்படாது.