மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | இது புதுசா இருக்குண்ணே.. கல்யாண மண்டபம் கொடுத்த விநோத ஆஃபர்.. ஆச்சர்யப்பட்டுப்போன மக்கள்..!
சோழர் குலத்தின் மாணிக்கம் என்று அன்புடன் அழைக்கப்படும் அருண்மொழிவர்மன் தஞ்சை பெரிய கோவிலை கட்டி வரலாற்றில் நீங்கா புகழ் பெற்றவர். அரசரான பிறகு அவரது சாதனைகளை போற்றும் விதத்தில் அவருக்கு ராஜராஜ சோழன் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. இன்றும் சோழர் குல வரலாற்றில் மிக முக்கிய மன்னராக ராஜராஜன் அறியப்படுகிறார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.
இந்நிலையில், ராஜராஜ சோழரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இதனை ஏற்று இந்த ஆண்டு முதல் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"மாமன்னர் சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. கேரளாவையே நடுங்க வச்ச இளம்பெண்.. பகீர் சம்பவத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!