'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'புதிய நம்பிக்கையாக'... 'மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள 'முக்கிய' தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் புதிய நம்பிக்கை தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகில் வேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில், நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 72.39 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 63 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.53 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 87.05 சதவீதமாகவும் இருந்தது. முன்னதாக கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்காக உயர்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் 25.5 நாட்களில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்த நிலையில், தற்போது 70.4 நாட்களாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிர வரைபடத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடையும் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளதும், நோய்த்தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரிதுள்ளதும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை தருவதாக அமைந்துள்ளது.