darbar USA others

'லட்சக்கணக்குல' குடுத்து ஏலம் எடுத்துருக்கோம்... 'கடைசி' நேரத்துல இப்டி சொல்றீங்க?... 'பிரபல' அணிக்கு ஏற்பட்ட சிக்கல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 13, 2020 06:31 PM

பிசிசிஐ விதிப்படி ஐபிஎல் தொடரில் மிக அதிக வயதுடையவரான, சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது.

KKR Spinner Pravin Tambe not eligible to play in IPL

ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த வருடம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் பணிகள் வீரர்களை போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்தன. அந்தவகையில் பிரவீன் தாம்பே என்ற 48 வயது பவுலரை கொல்கத்தா அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பிரவீன் தாம்பே விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர்கள் ஒன்று ஐபிஎல் தொடரில் ஆடலாம் அல்லது இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி மற்ற நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கலாம்.

ஆனால் அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் பிரவீன் தாம்பே பங்கேற்றதால் பிசிசிஐ விதிப்படி அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரவீன் தாம்பேவை இப்போது விளையாட முடியாது என கூறும் அதிகாரிகள் அவரை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.