இன்னைக்கு ‘கடைசி’ மேட்ச்.. வேற வழியே இல்ல.. ‘தல’ அத பண்ணியே ஆகணும் .. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ள போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி நன்றாக விளையாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் தோல்விகள் காரணமாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை முதல்முறையாக இழந்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதற்கு அணியின் பேட்டிங் சொதப்பியதே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த முறை சிஎஸ்கே அணியில் மூத்த வீரர்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. டு ப்ளிசிஸ், அம்பட்டி ராயுடு சில போட்டிகளில் நன்றாக ஆடினார்கள். ஆனால் அவர்கள் எல்லா போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வாட்சன் மூன்று போட்டியில் மட்டுமே நன்றாக விளையாடினார்.
அதேபோல் கேதர் ஜாதவ்வும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த சீசனில் அவர் ஆடிய விதம் ரசிகர்களுக்கு அதிர்ப்தியையே தந்தது. பிராவோ பந்துவீச்சில் அசத்தினாலும், பேட்டிங்கில் சரியாக பங்களிப்பை தரவில்லை. இதில் ஜடேஜா மட்டுமே எல்லா போட்டிகளிலும் அணிக்காக கடுமையாக உழைத்தார்.
இந்த தொடரில் சென்னை அணியில் பேட்டிங்கில் சற்று சுமாராக ஆடிய வீரர் என்றால் அது தோனிதான். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே தோனி 47 ரன்களை எடுத்தார். வேறு எந்த போட்டியிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஒரு சில போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி, சென்னை அணியின் கடைசி போட்டியாகும். அதனால் இன்றைய போட்டியில் தோனி கண்டிப்பாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த தொடருக்கு பின் ஒவ்வொரு வீரர்களின் ஆட்டம் குறித்தும் சிஎஸ்கே அணி விசாரணை மேற்கொண்டு ரிப்போர்ட் தயார் செய்யும். இதில் தோனியின் ஆட்டமும் கண்டிப்பாக கவனிக்கப்படும்.
அடுத்த வருட ஐபிஎல் சீசனில் தோனி சிஎஸ்கே அணிக்கு ஆடுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இதனை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு கேப்டனாக, பேட்ஸ்மேனாக தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் . அதேபோல் தன்மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய கடைசி போட்டியில் தோனி அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.