'என்னா அடி... இரக்கமில்லையா உனக்கு?'.. ஆர்சிபி-யை தாறுமாறாக துவம்சம் செய்த ஹைதராபாத் அணி!.. பாயின்ட்ஸ் டேபிள் தலைகீழா மாறிடுச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 52-வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சஹா ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய வார்னர் 8 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார்.
அவரும், 26 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். விரித்திமான் சாஹாவும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக களமிறங்கிய ஜேஷன் ஹோல்டர் அதிரடியாக ஆடி 26 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 121 ரன்கள் என்ற இலக்கை வெறும் 14.1 ஓவர்களில் ஹைதராபாத் அணி சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது.
இந்த மோசமான தோல்வியின் மூலம், பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் கடுமையாக பாதித்துள்ளது. ப்ளேஆஃப்ஸ்க்கு இன்னும் முழுமையாக முன்னேறாத ஆர்சிபி அணிக்கு, அடுத்துவரும் ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக மாறியிருக்கிறது.
மேலும், ஆர்சிபி அணியை துவம்சம் செய்து, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதன் மூலம், 7வது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, தற்போது 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மற்ற செய்திகள்
