“பவுலிங், பேட்டிங்ல எந்த குறையும் இல்ல!”.. “தோத்ததுக்கு இதான் காரணம்!” - வேதனையுடன் பகிர்ந்த ‘கேப்டன்!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடாஸை இழந்தது தான் காரணம் சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு என கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் வருத்தமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட அண்மை போட்டியில், சென்னை அணி முதலில் டாஸ் வென்றதை அடுத்து தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் பேட் செய்த கொல்கத்தா வீரரான நிதிஷ் ராணா 87 ரன்களும், தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 172 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி வீரர்களான அம்பத்தி ராயூடு 38 ரன்களிலும், தோனி 1 ரன்களிலும் வெளியேற, நின்று ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து சென்னை அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். பின்னர் கடைசி 10 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலையில் களத்திற்கு வந்த ஜடேஜா வெறும் 11 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என விளாசி 31 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
போட்டி முடிந்த பின் பேசிய, கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன், “நாங்கள் சிறப்பாக ஆடியும், எங்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை.தோல்விக்கு மிக முக்கிய காரணம் டாஸை இழந்தது தான். பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். அவர்களை குறைச் சொல்ல ஒன்றுமில்லை. அத்துடன் பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறு இன்னும் வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன், இந்த தோல்வியை மறந்துவிட்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு ஆயத்தமாவோம்” என்றார்.